தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்தும் பொது மக்களுக்கான குறை தீர்க்கும் முகாம்

திருச்சி மின் பகிர்மான வட்டம் நகரியம் கூட்டத்தை சார்ந்த பகுதிகளில் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின்கட்டணம் பழுதடைந்த மின்மீட்டர்கள் மாற்றுதல், குறைந்த மின்னழுத்தம்,
சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல், தொடர்பான புகார்களை பெற சிறப்பு முகாம் வருகின்ற (5/04/2025) சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தென்னூர் திருச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொண்டு பெறப்படும்
புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆர். நாராயணன் செயற்பொறியாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision