திருச்சி ஆட்சியர் முன்பு தேமுதிக நிர்வாகிக்கு நடந்த கொடுமை

திருச்சி ஆட்சியர் முன்பு தேமுதிக நிர்வாகிக்கு நடந்த கொடுமை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடந்த இந்த ஆய்வு நடந்தது. 

அதன் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டார். 

அதில் திருச்சி மாவட்டத்தில் 11,20,158 மொத்தம் ஆண் வாக்காளர்களும், 11,89,933 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 22,63,169 பேர் வாக்காளர்களாக உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,99,496 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிடும்போது திமுக கட்சியினர் அதிகமானோர் வந்திருந்தனர். அமரும் பொழுதும் பட்டியல் வெளியிடும் பொழுதும் திமுக கட்சியின் கூட்டம் அதிகமாக இருந்ததால், மற்ற கட்சியினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மிக முக்கியமாக தேமுதிக போக்குவரத்து அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில தலைவர் திருப்பதி பத்திரிகையாளர் புகைப்படம் எடுக்கும் பொழுது அவர் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டதாக பத்திரிக்கையாளரிடம் கூறி விட்டு கோபத்துடன் வெளியேறினார். மற்ற கட்சியினரும் தங்களுக்கு இருக்க சரியாக ஒதுக்கப்படவில்லை என அதிகாரிகளிடம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி சென்றனர்.

முன்னதாக இது குறித்து திருப்பதி ஆட்சியரிடம் குறிப்பிட்டபொழுது அவரை அழைத்து அருகில் வைத்து வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு புகைப்படம் எடுத்த சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision