முதலமைச்சர் துபாய் பயணம் - ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

முதலமைச்சர் துபாய் பயணம் - ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 6வது நாளாக இன்று காலை கையெழுத்திட்டார். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்தித்து பேசிய போது.... திருச்சி தங்கியிருந்த 14 நாட்கள் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் பாசத்தை பொழிந்தார்கள். இதை பொறுத்துக் கொள்ளாமல் பழிவாங்கும் அரசாக இந்த திமுக அரசு உள்ளதாக குறிப்பிட்டார்.

முதல்வரின் துபாய் பயணம் குறித்த கேள்விக்கு விதை போட்டது அதிமுக அதனை செயல்படுத்த வேண்டும். ஆனால் தற்பொழுது இவர்கள் என்ன கிழிக்க போகிறார்கள் என பார்ப்போம். துபாய் பயணம் அரசுமுறை பயணமா?சொந்தப் பயணமா என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் என தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற தேதியா குறித்தோம் என்றும் தற்பொழுது அதையெல்லாம் நிறைவேற்றுவது சட்டம் இல்லை என திமிர்த்தனமாக நிதியமைச்சர் பேசுகிறார்.

தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதி 2 கோடியே 14 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்கள். ஐந்து வருடங்களில் கணக்கிட்டு பார்த்தால் 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் இதெல்லாம் பட்ஜெட்டில் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள் பால் விலை முதல் பஸ் கட்டணம், சொத்து வரி என அனைத்தையும் அடுத்து உயர்த்தி தமிழக மக்களுக்கு பரிசு கொடுக்க திமுக காத்துக் கொண்டுள்ளது.

208 திட்டங்களை நிறைவேற்றியதாக சட்டமன்றத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தேன் என சொல்வது போல் உள்ளது என்று கிண்டல் அடித்தார். திமுக அரசு பொறுப்பேற்றதும் பொருளாதார நிபுணர்களை நியமித்தது அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தார்கள் வெளிப்படையாக சொல்லுங்கள். நிதி நிலையை உயர்த்துவதற்கு என்ன வழிமுறைகளை தந்தார்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு கிணற்றில் போட்ட கல் போல திறமையற்ற நிர்வாகம் வருத்தப்படக்கூடிய வேதனைப்படக்கூடிய விஷயமாக உள்ளது தமிழ்நாடு அரசு தலையெழுத்து என குறிப்பிட்டார்.

மீண்டும் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிய உள்ளதே என்ற கேள்விக்கு அதிமுகவின் எழுச்சியைப் பார்த்து திமுக பொறுத்துக் கொள்ள முடியாமல் வழக்கு போடுகிறார்கள். இது மன்னராட்சி அல்ல மக்களாட்சி நீதிமன்றத்தை நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தவறு செய்யும் போது நீதிமன்றம் தட்டி கேட்கும் என்று நம்புவதால் எங்களுக்கு பயமில்லை என குறிப்பிட்டார். இன்றுடன் நீதிமன்றம் இவருக்கு விதித்த 2 வாரம் (6 நாட்கள்) நிபந்தனை ஜாமின் கையெழுத்து முடிவடைகிறது. உடனே திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO