விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்!!

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்!!

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டங்களும் நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர்.அதனையடுத்து அந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.தி.மு.க,காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும்,அமைப்புகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.மத்திய அரசு அந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். அதுவரை இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடம் காரணமாக அவர் அந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். 

Advertisement

ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது என கூறினார்.இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.இந்த போராட்டத்தால் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.