விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அதிராம்பட்டினத்தில் சாலை மறியல் - 300 மேற்பட்ட விவசாயிகள் கைது!!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Advertisement
தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
முழு அடைப்பின் ஒரு அங்கமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, தமுமுக, முஸ்லீம் லீக், மஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன. சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS