நான் சிறை செல்ல தயங்க மாட்டேன் - திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு

நான் சிறை செல்ல தயங்க மாட்டேன் -  திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது...

தனது இருப்பை காட்டிக்கொள்ள தான் அண்ணாமலை பேசி வருகிறார். அவருக்கு நாங்கள் பதில் தருவதே இல்லை. அண்ணாமலையை பார்த்தும், அதிமுகவை பார்த்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கருணாநிதி திருச்சிக்கு வரும் போதெல்லாம் திருச்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

அவர் வழியில் தற்போது முதலமைச்சரும் பல திட்டங்களை திருச்சிக்கு தந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க வில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த மக்கள் நல திட்டத்தையும் திருச்சிக்கு கொண்டுவரவில்லை.

செந்தில் பாலாஜி சிறை சென்று விட்டார். அடுத்து கே.என்.நேரு தான் சிறைக்கு போக உள்ளார் என அ.தி.மு.க வினர் கூறிவருகிறார்கள். நாங்கள் சிறை செல்வது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அ.தி.மு.கவினரை போல் பயப்பட மாட்டோம். திமுகவிற்காக அமைச்சராகவும் இருப்பேன், சிறைக்கு செல்ல தயாராகவும் இருப்பேன். தி.மு.க வின் தொண்டர்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது என்றார். இந்த கூட்டத்தில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn