திருச்சி மாநகர சாலைகளில் "கட்டண பார்க்கிங்" - மாநகராட்சியின் புதிய திட்டம்!

திருச்சி மாநகர சாலைகளில் "கட்டண பார்க்கிங்" - மாநகராட்சியின் புதிய திட்டம்!

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்திரம் பேருந்து நிலைய பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருகின்ற மே மாதம் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதைகள் மற்றும் பல மாறுதல்கள் நடைபெற்று பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் "கட்டண பார்க்கிங் வசதி" அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது. திருச்சியில் பெரும்பாலான போக்குவரத்து நெரிசலுக்கு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாய் காணப்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக மாநகராட்சி முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

அந்தவகையில் திருச்சி ஜங்ஷன், அலெக்சாண்டிரியா ரோடு, கண்டோன்மண்ட், தில்லைநகர், சாஸ்திரி ரோடு மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான போக்குவரத்து நெரிசல்கள் தவிர்க்கப்படுவதோடு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் ஒரு மணி நேரத்திற்கு இரு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாய் கட்டணமாகவும், காருக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்க உள்ளன.

Advertisement

இந்தத் திட்டம் வருகின்ற வாரங்களில் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm