தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விண்ணப்பிக்க கடைசி நாள் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விண்ணப்பிக்க கடைசி நாள் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 04.08.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையம், புள்ளம்பாடி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2021 மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.

மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ Debit card / credit card/Net banking / Gpay வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவிருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். 

அதன்படி மாணவர்கள் மாநில அளவிலான இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு தாங்கள் சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவினை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr