சாக்குமூட்டையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் எதிரொலி - திருச்சி ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடி மாற்றம்!!

சாக்குமூட்டையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் எதிரொலி - திருச்சி ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடி மாற்றம்!!

Advertisement

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததை அடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், காவல்துறையினரை இடமாற்றம் செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது தவிர அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்த புகாரிலும் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியான செய்திகுறிப்பில், திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள சிவராசு தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், ராஜன் எஸ்பியும், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் முசிறி அருகே ஒரு கோடி ரூபாய் சாக்குமூட்டையில் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி ஆட்சியராக திவ்ய தர்ஷிணி, எஸ்.பியாக மயில்வாகனன், சார் ஆட்சியராக விசு மகாஜனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் திருச்சி புதிய ஆட்சியராக திவ்யதர்ஷிணி, எஸ்.பி.யாக மயில்வாகனன், சார் ஆட்சியராக விசு மகாஜன் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU