திருச்சியில் முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யத்தினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!!

திருச்சியில் முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யத்தினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பல கட்சியினர் தற்போது தொகுதிக்கான வேட்பாளர்களை நியமித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சில கட்சியினர் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தற்போது தொடங்கியுள்ளனர்.திருச்சி மத்திய பகுதியான பாலக்கரை பகுதியில் இருதயபுரம், எடத்தெரு, பருப்பு கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

திருச்சி மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் கிஷோர் குமார் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியினர் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் நேர்மையான துரித நிர்வாகம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், சூழலியல் சுகாதாரம், மின்னணு இல்லங்கள், பசுமைப்புரட்சி உள்ளிட்ட தீர்மானங்களை சொல்லி வாக்கு சேகரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, இல்லத்தரசிகளுக்கு ஊதியம், மொழித்திணிப்புக்குக் கண்டனம், ஜெயலலிதா மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருவதில் அலட்சியம் கூடாது, எழுவர் விடுதலை, தமிழக அரசு வாங்கிய கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உட்பட 25 தீர்மானங்கள், மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.