கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி அரசு மருத்துவமனை

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி அரசு மருத்துவமனை

கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா கூறுகையில்,... இரண்டாவது அலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்க்கும் விதமாக மூன்றாவது அலையில் அது போன்ற நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவில் 200 படுக்கை வசதிகள், 20 ICU படுக்கை வசதிகள், 16ஆக்சிசன் இணைப்புடைய படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

1200 படுக்கைகளுடன் கொரோனா   சிகிச்சை மையம் தயார் நிலையில் இருக்கின்றது. மேலும் நோய்த்தொற்று  அதிகரித்தால் 600 படுக்கை வசதிகள்  சிறப்புப் சிகிச்சைப்பிரிவு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டாயிரத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகமருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இரண்டாவது அலையில் ஏற்பட்டது போல் மூன்றாவது அலையில் நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 35 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் முதலுதவி சிகிச்சைகள் உதாரணமாக நோயாளிகளின் ரத்த அழுத்த அளவு, ஆக்சிசன் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு நோய் அறிகுறி வைத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமா அல்லது வீட்டில் தனிமைப்படுத்த வேண்டுமா என்று மருத்துவர்களின் ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவர். 

மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மூன்றாவது அலையில் சமாளிக்க உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், மூன்று பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன், ஆக்சிஜன் உருவாக்கும் ஆலைகள் மற்றும் ஒரு டிரையேஜ்  வசதி ஆகியவற்றின் பணிகள் நடந்து வருகின்றன. பிரதம மந்திரியின்  பொது நிதியிலிருந்து ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட PSA திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வந்துள்ளது.

விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டூக்கு   பின்னால் நிறுவப்படும் இது ஒரு மாதத்திற்கு நிறுவப்படும் இரண்டாவது ஆலையாகும். 350 லிட்டர் திறன் கொண்ட பி.எஸ்.ஏ ஆலை சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் திறக்கப்பட்டது. மருத்துவமனையில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே போர்வெல்கள் சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 நாட்களில் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும் மூன்றாவது அலையை எப்படியும் கட்டுக்குள் கொண்டுவந்து குழந்தைகள் பாதிப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr