காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தைகள் - கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம்!

கடந்த 17 ஆம் தேதியன்று திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 8 வயது மிதுன் மற்றும் ரஷீத் வயது 12 இருவரும் மாயமாகினர்.
Advertisement
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த ஏழு நாட்களாக தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது வரை மீட்கப்படாத நிலையில், மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்து வருகின்றனர், காவல்துறையினர் தற்போது தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
ஏழு நாட்கள் கடந்தும் சிறுவர்கள் உடல் மீட்கப்படாதால் பெற்றோர்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm