அதிநவீன தொழில்நுட்பக் கருவியுடன் திருச்சியில் அமலாக்க துறையினர் சோதனை

அதிநவீன தொழில்நுட்பக் கருவியுடன் திருச்சியில் அமலாக்க துறையினர் சோதனை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள தாளக்குடி, நெச்சியம், மாதவப் பெருமாள் கோயில், கொண்டயம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அரசு அனுமதி டோக்கன்களை விட அதிகமான லாரிகள் மணல் விற்பனை செய்யப்படுவதாகவும், 10 அடிக்கு மேல் மணல் அள்ளப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. 

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே இருமுறை சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என 10 பேருடன் சிஆர்பி எஃப் வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். 

கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உதவியுடன் மிதவை படகுடன் கூடிய ஆழம் கண்டறியும் கருவியுடன் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. 3 அடி ஆழத்திற்கு மட்டும் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision