பிரியாணி காதலர்களுக்கான நற்செய்தி - மாபெரும் பிரியாணி திருவிழா!!

பிரியாணி காதலர்களுக்கான நற்செய்தி - மாபெரும் பிரியாணி திருவிழா!!

பிரியாணி என்பது வார்த்தையல்ல, உணர்வு என்று hashtag போடுமளவிற்கு பெரும்பாலானோர் பிரியாணி பிரியார்களாக உள்ளனர். சங்ககாலத்தில் கறியும், அரிசியும் சேர்ந்து சமைக்கப்பட்டு ஊண் உணவாக உண்ணப்பட்ட உணவு, பின்பு மாறுபாடு அடைந்து பிரியாணியாக பரிணாம வளர்ச்சியடைந்து நம்மில் பலருக்கு பிடித்த உணவாக மாறியுள்ளது.

கொஞ்சமாக கிடைத்தாலே மகிழ்ச்சி என்றிருக்கும் நிலையில் அன்லிமிடெட்டாக அதுவும் குறைந்த விலையில் கிடைத்தால் மகிழ்ச்சி இரட்டிபாகும் இல்லையா?? அப்படி திருச்சியில் மாபெரும் பிரியாணி திருவிழாவை நடத்தவிருக்கின்றனர் எஸ்எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், அதனின் இயக்குனர் திருகண்ணன் அவர்கள் திருவிழா பற்றி பகிர்கிறார்.,

உணவு என்றாலே பலருக்கும் பிரியம், அதில் பிரியாணி என்றால் கேக்கவே வேண்டாம், தற்போதெல்லாம் எந்த சிறப்பு நாளாக இருந்தாலும் அங்கு கண்டிப்பாக பிரியாணி இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரியாணி இருந்தாலே அந்த நிகழ்வு சிறப்பாகிவிடுகிறது. அதே போல நாம் உணவககங்களில் சாப்பிடும் உணவிற்கும் செஃப் கையால் சமைத்து சாப்பிடும் உணவிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

செஃப் சமைத்து தந்து சாப்பிடும் வகையில் திருச்சியில் சில ஹோட்டல்களில் மட்டும் தான் சேவை உள்ளது. செஃப் சமைக்க வேண்டும், அது மக்களுக்கு விருப்ப உணவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த மாபெரும் பிரியாணி திருவிழா..

திருச்சி மக்களுக்கு செஃப் மற்றும் நமது இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இணைந்து பைன்னாப்பில் கேசரி, சீரகசம்பா சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன் கிரேவி, ஆனியன் ரைதா, தல்ஸா மற்றும் கத்திரிக்காய் தொக்கு சமைத்து buffet முறையில் பரிமாற உள்ளனர். அக்டோபர் 20ஆம் தேதி உலக செஃப் தினத்தை முன்னிட்டு, ஞாயிற்று கிழமை காலை 11:00 மணி முதல் 02:00 மணி வரை இந்த அன்லிமிடெட் மாபெரும் பிரியாணி திருவிழா நடக்கவுள்ளது. 

Buffet மட்டுமில்லாமல் 2-3 பேர் தாராளமாக சாப்பிடும் வகையில் பக்கெட் பிரியாணியும் உள்ளது. தரத்துடன் சுவையும், விலையும் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதால் buffet ₹230 மற்றும் பக்கெட் பிரியாணி ₹600 கிற்கும் கொடுக்கவுள்ளோம். இவை இரண்டிற்குமே முன்பதிவு முக்கியம். தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளதால், தேவையுள்ளவர்கள் உடனே முன்பதிவு செய்து கொள்ளவும் என்றார். 

கீழே உள்ள கூகுள் பார்மிலும் முன்பதிவு செய்யலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfgRXKvr8wGV7cKhEGbWxZfORLpDlJ8jkSxoJqU_7rHvMw8xg/viewform?vc=0&c=0&w=1&flr=0

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision