திருச்சி அருகே திருட முயன்ற 2 மர்ம நபர்கள் - பொதுமக்கள் தாக்கியதில் ஒருவர் பலி!!

திருச்சி அருகே திருட முயன்ற 2 மர்ம நபர்கள் - பொதுமக்கள் தாக்கியதில் ஒருவர் பலி!!

திருச்சியில் 2 மர்ம நபர்களுக்கும் , பொதுமக்களுக்குமிடையே மோதல். மர்மநபர்கள் வீடுகளுக்குள் திருட வந்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

திருச்சி அல்லூர் கிராமத்தில் 2 மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்றதாகக் கருதி, அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது , அதில் ஒருவர் பொதுமக்களைக் கண்டதும் தப்பி ஓடியுள்ளார். மற்றோரு நபர் அங்கு கிடந்த மரக்கட்டையால், பொதுமக்களையும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கியுள்ளார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம், ராதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 7 இருசக்கர வாகனங்களை மர்ம நபர் சேதப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் திருப்பி தாக்கியதில், அந்த நபர் படுகாயமடைந்து பிடிபட்டார். படுகாயமடைந்த அந்த நபரை கயிற்றால் கட்டி சரக்கு வாகனத்தில் கொண்டுவந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் சேர்த்தனர்.

இது குறித்து அரசுமருத்துவமனை காவல் நிலைய போலீசார், ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தப்பி ஓடிய மற்றொரு நபரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த இரண்டு பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், சிக்கியவர் அரவிந்த் (25), திபூர் (30) என தெரியவந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட திபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பொது மக்களிடம் சிக்கி இறந்தவர் குறித்தும், கைதான அரவிந்த்திடம் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO