திருச்சியில் டிராக்டர் பேரணி - விவசாயிகள் சாலை மறியல்!!

திருச்சியில் டிராக்டர் பேரணி - விவசாயிகள் சாலை மறியல்!!

Advertisement

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் டிராக்டர் பேரணி சென்றனர்.

மத்திய அரசு டெல்லியில் இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் அழிந்துவிட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 10க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுடன் திருச்சி - நெ.1 டோல்கேட் (திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.