அச்சத்தில் பேருந்து பயணிகள்....வலுகட்டாயமாக பணம் பறிக்கும் கும்பல் - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

அச்சத்தில் பேருந்து பயணிகள்....வலுகட்டாயமாக பணம் பறிக்கும் கும்பல் - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்து எந்த நேரத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பேருந்துக்கள் இயக்கப்படாமல் வெறிச்சோடி இருந்தது. 

Advertisement

திருச்சி மத்திய பேருந்து நிலையம் தற்பொழுது பேருந்து இயக்கி வருவதால் பேருந்து பயணிகள் அதிகளவு வர தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளிடம் திருநங்கைகள் வலுகட்டாயமாக பணத்தை வசூலித்து வருகின்றனர். பணம் இல்லை என்று கூறும் பயணிகளை தரக்குறைவாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் பயணிகள் அச்சத்துடன் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பேருந்து நிலையத்திற்குள் திருநங்கைகள் அரைகுரை ஆடைகளுடன் சுற்றி திரிவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பேருந்தில் அமர்ந்திருக்கும் ஆண், பெண் பயணிகளிடம் மிரட்டும் தோணியில் ஒருசில திருநங்கைகள் நடந்து கொள்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பேருந்து பயணிகள். மத்திய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் பாதிக்கபடுவதாக பயணிகள் புகார் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். 

பேருந்து பயணிகளின் அச்சத்தை நீக்கி நிம்மதியான பயணத்திற்கு வழிவகை செய்ய காவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்க்கு வரும் பயணிகள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்திற்காக காத்திருந்த பயணி பணம் தர மறுத்ததால் திருங்கைகள் அந்த பயணியை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.