திருவானைக்காவல் பள்ளிவாசல் இடிப்பு - 2000க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம்!!

திருவானைக்காவல் பள்ளிவாசல் இடிப்பு - 2000க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் அணுகு சாலை விரிவாக்கத்திற்காக பள்ளிவாசல் இடித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை அதே பகுதியில் கட்டி தர வலியுறுத்தியும் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசல் உள்ளே ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலர் செருப்புடன் நுழைந்ததாகவும், உடனடியாக அதே இடத்தில் மசூதியைக் கட்டி தரவேண்டும் எனவும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும் கண்டனக் குரல்களை எழுப்பினர்.