முட்புதரில் கிடந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் - பரபரப்பு
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றதாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த மாரியம்மனை தரிசிக்க திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்து தங்களது நேர்த்திக்கடனை சமயபுரம் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்களை மாதம் இருமுறை திறந்து என்னும் போது ரொக்கமாக சுமார் ஒரு கோடிக்கு மேலும் தங்கமாக ரூபாய் 3 கிலோவும், 4 கிலோவுக்கு மேல் வெள்ளி பொருட்களும் மற்றும் அயல் நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நிலையில் இந்த உண்டியல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபம் பின்பகுதியில் உள்ள முட்புதர்களில் கிடக்கிறது. இந்த உண்டியலில் இருந்த பணத்திற்காக யாரேனும் தவறான முறையில் பயன்படுத்தி உள்ளனரா? என்பது தெரியவில்லை.
இது குறித்து கோயிலில் இணை ஆணையர் கல்யாணியிடம் தொடர்பு கொண்ட பொழுது பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் தொடர்பினை எடுக்காமல் தவிர்த்து வருகிறார். இருப்பினும் கோயில் அலுவலர்களிடம் கேட்டபோது இந்த உண்டியல் எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. அது பழைய உண்டியலாக இருந்தாலும், அதனை முறையாக பாதுகாக்க வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவாக உள்ளது.
இந்த நிலையில், இப்படி மதிப்புமிக்க இந்த கோயில் உண்டியலை இவ்வளவு தூரம் இந்த முட்புதர்களில் கிடப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தினால் கோயில் உண்டியல் பணத்திற்காக திருடப்பட்டு வீசப்பட்டுள்ளதா அல்லது வேறு என்ன காரணம் என்பது தெரியவரும் என்கின்றனர் அப்பகுதி மக்கள் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள்.
இந்த கோயில் உண்டியலை திறந்து எண்ணப்படும் போது கடந்த ஆண்டு கோயில் ஊழியர்களே இரண்டு முறை தங்கத்தினை திருடியது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடியவர்களே கைது செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision