8 மாதம் பிறகு தியேட்டர் திறப்பு - டல் அடிக்கும் திரையரங்கு!
திருச்சி மண்டலத்தில் டிடி ஏரியா என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் அழைக்கப்படும் திருச்சி, தஞ்சை. திருவாரூர், நாகை, காரைக்கால், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய இப்பகுதியில் 110 திரையரங்குகள் உள்ளது.
Advertisement
இதில் கொரோனா அச்சுறுத்தலின்காரணமாகவும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும்நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி 50சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி 8மாதங்களுக்குப்பிறகு திருச்சி மாவட்டத்தில் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன, புதியபடங்கள் ஏதும் வெளியாகாதநிலையில் தீபாவளிக்கே பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள்
தெரிவித்த நிலையில் 3திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது. அதேநேரம் குறைந்த அளவே ரசிகர்கள் வருகைதந்து படத்தைக் கண்டுரசித்தனர். முன்னதாக திரையரங்கில் டிக்கெட் பெற்றுக்கொண்டு அவர்கள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி பின்னர் அவர்களது உடல்நிலை வெப்பம் பரிசோதிக்கப்பட்டு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.திரையரங்கு உள்ளே சென்று ரசிகர்கள் ஆர்வமுடன் திரைப்படம் காண அமர்ந்து திரைப்படம் போட்டபோது பாகுபலி டிரைலர் திரையிடப்பட்டது பின்பு ஆயிரத்தில் ஒருவன் திரையிடபட்டது.