9வது ஆண்டாக திருச்சியில் சிறார் தீபாவளி கொண்டாட்டம்!
தீபாவளி பண்டிகை என்றாலே குடும்பத்துடன் குதூகலித்து உற்சாகமாய் கொண்டாடும் நாள். புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்வித்து வாழும் நாள். ஆனால் சிறப்பு குழந்தைகளையும், பல விடுதிகளில் தங்கியிருக்கும் குழந்தைகளின் நிலைமை நினைத்தால் கண்ணீர் மட்டும்தான் மிஞ்சும். இவர்களுக்காக திருச்சியில் சிறார் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
Advertisement
திருச்சி பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பாக வறுமைச் சூழலில் உள்ள சுமார் 110 குழந்தைகளுடன் இந்த வருட தீபாவளி திருச்சி தேசியக் கல்லூரியில் கொண்டாடினர். டிரஸ்ட் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள், பட்டாசு வெடித்து சிறார்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று சிறார் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மருத்துவர் ஆனந்த் ரங்கசாமி, தேசியக் கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, பி.எஸ்.ஆர் டிரஸ்ட் நிறுவனர் ஷேக் அப்துல்லா, நிர்வாகி குணசீலன், வாய்ஸ் டிரஸ்ட் நிர்வாகி பிரீத்தி ஆகியோர் கலந்துகொண்டு உதவிகளையும் வழங்கினர் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Advertisement
இந்த சிறார்களுடன் தீபாவளியை கடந்த 9 வருடங்களாக கொண்டாடி அவர்களோடு அன்பை பரிமாறிக்கொள்ளும் தீபாவளியாக நடத்தி வருகின்றனர்.