தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.
Advertisement
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காகவும் மத்திய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனை தவிர்ப்பதற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து உள்ளனர்.
இதில் தஞ்சாவூர் மார்க்கமாக திருவாரூர் நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகிலும், புதுக்கோட்டை வழியாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் கல்லுக்குழி ரோடு பகுதியில் இருந்தும், மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அருகே இருந்து இன்று முதல் செயல்படும்.