மணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள் போராட்டம்

மணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள் போராட்டம்

மணப்பாறை அருகே ஒரே நிலத்திற்கு  வெவ்வேறு ஆவணங்கள் இருப்பதாக ஏற்பட்ட பிரச்சனையில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள் போராட்டம் - வட்டாட்சியர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சிறு கிராமம் தனிமாணிக்கம்பட்டி. இங்கு உறவினர்களான சுமார் 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு 6 பேர் உரிமையாளராக சிட்டா இருக்கும் நிலையில், அதே பகுதியினை சேர்ந்த தனிநபர் ஒருவர் அவரது பெயரில் தனி பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் இருத்தரப்பினருக்கும் பல ஆண்டுகளாக சர்ச்சை இருந்து வரும் நிலையில், அந்த தனி நபர் எதிர்தரப்பினர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் தொடுப்பதாகவும், காவல்துறையினரிடம் புகார்கள் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த 6 பேர் கொண்ட தரப்பினர் ஊர்மக்களுடன் இணைந்து, சர்ச்சைக்குரிய நிலத்தில் விளைந்துள்ள கருவேலாம் மரங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பல ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்சனையில் நிரந்தர தீர்வு கேட்டு அங்குள்ள 30 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி அமர்ந்து, ஆர்ப்பாட்டம் செய்தும், அடிப்படை குடிமகனுக்கான அரசு ஆவணங்களை தரையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியர் லஜபதிராஜ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பா.மணிகண்டன், துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் இருத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது