திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு - போலீசார் குவிப்பு!

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு - போலீசார் குவிப்பு!

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஏர்போர்ட், செம்பட்டு வரை நான்கு வழிசாலை விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள உள்ள வீடுகள், கோயில்கள், கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கட்டிடங்களை இடித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடத்தை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து கொடுத்து விட்டு கட்டிடங்களையும், வீடுகளையும் இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இதுக்குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்..... ஏர்போர்ட் சாலை இருபுறமும் உள்ள வீடு, கடைகள் 40 வருடத்திற்கு மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு வீடுகள், கடைகளை அகற்றுவதாக தெரிவித்த அதிகாரிகள் நாகமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று இடம் வழங்குவதற்காக டோக்கன் மட்டும் வழங்கி உள்ளனர். ஆனால் மாற்று இடத்தில் பணிகள் முழுமையடையவில்லை என்றும், வீட்டின் சாவி இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a