பொது கழிப்பிடம் கட்டிதரக்கோரி திருச்சியில் காத்திருப்பு போராட்டம் 

பொது கழிப்பிடம் கட்டிதரக்கோரி திருச்சியில் காத்திருப்பு போராட்டம் 

திருச்சி மாநகராட்சி 47, 48 வது வார்டுக்குட்பட்ட கூனிபஜார் பகுதியில் இடித்து கிடக்கும் பொது கழிப்பிடத்தை புதிதாக கட்டி கொடுத்து கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக பொது கழிப்பிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்ககாததால் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று காலை 10 மணி அளவில் கூனி பஜாரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கலந்து கொண்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் வருகை தந்து உங்கள் கோரிக்கை சம்பந்தமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்தனர். அதன்படி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அதே இடத்தில் இன்னும் 15 தினங்களில் புதிய கழிப்பறை கட்ட கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் நிறைவடையும் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டதையொட்டி போராட்டம் கைவிடப்பட்டது. மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் S.சுரேஷ், மாவட்ட து.தலைவர் கிச்சான், பகுதி செயலாளர் சேதுபதி, கிளை நிர்வாகிகள் தீபன், பிரபாகரன், வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn