திருச்சியில் 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு கடையை ஆய்வு செய்தபோது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் வீட்டை ஆய்வு செய்த போது சுமார் 125 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டு வழக்கு தொடுப்பதற்காக 6 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்பட்டு மூடப்படும் என்றும் பொதுமக்களும் தமிழக அரசால் தடை செய்யபட்ட அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால்

கீழே கொடுக்கபட்டுள்ள தொலைபேசிக்கு தகவல் கொடுக்கவும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ் பாபு உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் தெரிவித்தார்
தொலைபேசி எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண் : 99 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn