900 அழுகிய முட்டைகள் பறிமுதல் - உணவகத்திற்கு சீல்

900 அழுகிய முட்டைகள் பறிமுதல் - உணவகத்திற்கு சீல்

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள GMS ஹோட்டல் மீது பொதுமக்களிடமிருந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

இந்த புகாரை அடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராஹிம் தலைமையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் போது அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து உணவகங்களில் பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் உணவகத்திலிருந்து சுமார் 90 அழுகிய முட்டைகளும், அந்த சமயத்தில் உணவகத்திற்கு விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த சதாசிவம் என்பவரிடமிருந்து சுமார் 900 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக உற்பத்தி நிறுத்திவைவைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது. மேலும் மேற்கண்ட உணவகத்தின் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58ன் படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்..... இது போன்ற அழுகிய முட்டைகளையோ அல்லது காலாவதியான பொருட்களையோ கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய இப்ராஹிம், ஹர்சவர்த்தினி மற்றும் சிறப்பு ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision