திருச்சியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டம் - கண்டுகொள்ளுமா மாநகராட்சி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகர் 5 வது கிராஸ் பகுதியில் சாலைகள் போடப்படாத நிலையில், மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கம். இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அந்தப் பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் தொடர்ந்து மழை பெய்த வருவதால் அப்பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள்
பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனை மாநகராட்சிக்கு அறிவுறுத்தும் வண்ணம் அப்பகுதியிலுள்ள வீட்டினர் தங்கள் வீட்டுக்கு முன்னால் தேங்கி நிற்கும் மழை நீரில் காகித கப்பல் செய்து மிதக்கவிட்டு மாநகராட்சிக்கு தங்கள் நிலையை எடுத்துரைக்கும் போராட்டம் நடத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision