திருச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செல்ஃபி முனையம் திறப்பு
1981-84 ஆண்டு படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட, முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் செல்பி முனையத்தை இஸ்ரோ விஞ்ஞானியும், எல்விஎம்3 திட்ட இயக்குனருமான வி தாடியஸ் பாஸ்கர் செல்ஃபி முனையத்தை திறந்து வைத்தார்.
கல்லூரியின் அதிபர் அருள்தந்தை முனைவர் லியோனார்ட் பெர்னாண்டோ எஸ்.ஜே, செல்ஃபி பாயின்டை அர்ப்பணித்தார். இஸ்ரோ விஞ்ஞானி வி.ததேயுஸ் பாஸ்கர், நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பங்களிப்பைப் பகிர்ந்து கொண்டார். ஒரு மாணவனாக செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது பசுமையான நினைவுகளையும் எடுத்துரைத்துள்ளார். கல்லூரியின் செயலாளர் அருள்தந்தை முனைவர் கே.அமல் வாழ்த்துரை வழங்கினார்.
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக அழகிய செல்ஃபி கார்னரை நிறுவியதற்காக 1981-84 தொகுதி முன்னாள் மாணவர்களின் நற் செயலை முதல்வர் முனைவர் டாக்டர் எம். ஆரோக்கியசாமி சேவியர் நன்றியுடன் பாராட்டினார். செல்ஃபி கார்னர் அருகே வைக்கப்பட்டிருந்த பிஎஸ்எல்வி மாதிரி ராக்கெட் தந்த உதவிய இஸ்ரோவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரவீந்திரன் வரவேற்றார், முன்னாள் மாணவர்கள் சார்பில் திரு. அமல்ராஜ் அகஸ்டின் நன்றி கூறினார்.
இந்நிகழ்வின் போது கட்டடக் கலைஞர்கள் மற்றும் திட்டப் பணிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜேசு சபை நிர்வாகிகள், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைகளின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியர் அல்லாத நண்பர்கள். முன்னாள் மாணவர்கள் மற்றும் தச்சமயம் பயிலும் மாணவர்கள் உட்பட திரளானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO