திருச்சி அருகே கட்டிட தொழிலாளியை ஏமாற்றிய இளம்பெண் - 18 ஆயிரம் அபேஸ்!!

திருச்சி அருகே கட்டிட தொழிலாளியை ஏமாற்றிய இளம்பெண் - 18 ஆயிரம் அபேஸ்!!

Advertisement

திருச்சி மாவட்டம் முடிகண்டம் கேளார்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி செபஸ்தியார் மகன் ஆரோக்கிய அடைக்கலம். இவர் தனது உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்காக மணப்பாறை அடுத்த ராயம்பட்டிக்கு வந்திருந்த நிலையில், தனது மனைவி சாந்தி தெரஸாளின் ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க திண்டுக்கல் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்மிற்கு சென்றுள்ளார். 

Advertisement

இரண்டு முறை ஏ.டி.எம்மில் பண பரிவர்த்தனை செய்தும் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் ஆரோக்கிய அடைக்கலத்திற்கு உதவி செய்வதாக கூறி அவரது ஏ.டி.எம் அட்டையை வாங்கி பணம் எடுக்க முயன்றுவிட்டு, பணம் வரவில்லை என கூறி பின் மீண்டும் அட்டையை ஆரோக்கிய அடைக்கலத்திடம் கொடுத்துள்ளார். அந்த பெண் அங்கிருந்து சென்ற சில நிமிடத்தில் ஆரோக்கிய அடைக்கலத்தின் செல்லிடைப்பேசிக்கு ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என ஏ.டி.எம்மில் பணம் எடுத்த குறுஞ்செய்தி வந்துள்ளது. கையில் இருந்த ஏ.டி.எம் அட்டையை பார்த்தபோது அது மாற்று நபருடையது என தெரியவந்ததையடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த ஆரோக்கிய அடைக்கலம் வங்கி உதவியை நாடியுள்ளார். 

Advertisement

பின்னர் மணப்பாறை காவல்நிலையத்தில் இளம்பெண் ஏமாற்றியது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக்கொண்ட மணப்பாறை போலீஸார் வங்கி ஏ.டி.எம் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.