திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையப் போவது உறுதி - மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையப் போவது உறுதி - மகேஷ் பொய்யாமொழி பேச்சு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் , தி.மு.கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும்   திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   அவர்கள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில்   வாழவந்தான் கோட்டை தொண்டமான்பட்டி குங்குமபுரம் செட்டியார்தெரு பகுதிகளில்  தீவிர  சேகரிப்பில் ஈடுபட்டு ஆதரவு திரட்டினார்.

  பிரச்சாரத்தின்போது உரையாற்றியது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையப் போவது உறுதி எனவே கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ள இந்த தொகுதி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னை வெற்றி பெற வைத்தால் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக ஆகி என்னால் தொகுதிக்கு பல்வேறு பணிகளை ஆற்ற முடியும் எனவும் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிருக்கு உரிமைத் தொகை  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
கொரானா நிவாரணத் தொகையாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும்.
நூறு நாள் வேலைத்திட்டத்தை 100 நாட்களை 150அதிகப்படுத்தியும் ஊதியத்தை உயர்த்தி தரவும் கழகத்தலைவர் கூறியுள்ளதை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே. எஸ். எம். கருணாநிதி பழனியப்பன், குத்தூஸ் மற்றும்    தோழமை கட்சியின் நிர்வாகிகள்  மாவட்ட ஒன்றிய  கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள்  பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU