தொகுதி மக்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது ஸ்ரீரங்கம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கு.ப. கிருஷணன் பேச்சு

தொகுதி மக்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது ஸ்ரீரங்கம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கு.ப. கிருஷணன் பேச்சு

தொகுதி மக்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது ஸ்ரீரங்கம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கு.ப. கிருஷணன் பேச்சு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி. மு .க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை குமாரவயலூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்   ஸ்ரீரங்கம் தொகுதியின்தேசிய
 முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றதுகூட்டத்திற்கு மணிகண்டம் ஒன்றிய கழக செயலாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர்கு.ய ப .கிருஷ்ணன்,
  கூறுகையில் 1991ல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் 68% இரட்டை  இலைக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள்.

தொகுதி மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. என்னிடம் இருந்தும் தொகுதி மக்களை யாரும் பிரிக்க முடியாது.அதிமுக ஆட்சியில் மட்டுமே மக்கள் நிம்மதியாகவும் அமைதியான வாழ்க்கையும் நல்ல வணிகமும் செய்திருக்கிறார்கள்.

திமுகவின் வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறுகையில் மணல் குவாரிகள் அனைத்தும் இரவோடு இரவாக திறக்கப்படும் என்பது குறித்து மக்கள் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
திமுகவின் விடியலை நோக்கி என்பது ஸ்டாலின் தன் குடும்பத்தினருக்கு மட்டும் விடியலை தருவார் மக்களுக்கு அல்ல. 1996 ஆண்டிற்கு பிறகு  தாய் வீட்டிற்கு திரும்பவும் போட்டியிட வந்துள்ளேன் என்று கூறி ஆதரவாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU