கொடூரனின் மாவுகட்டு பிண்ணனி - விஸ்வரூபம் எடுத்த மாநகர போலீஸ்

கொடூரனின் மாவுகட்டு பிண்ணனி - விஸ்வரூபம் எடுத்த மாநகர போலீஸ்

திருச்சி வ.உ.சி. சாலை கேலக்சி டவர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 53). பேராசிரியையான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.சி.துறைதலைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்குள்ள மைதானத்தில் நடைபயிற்சி செல்வார். நேற்று முன்தினம் மாலை அவர் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக வாகனத்தை எடுக்க சென்றார். அப்போது, அங்கு நின்ற ஒரு வாலிபர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசிரியையின் தலையில் தாக்கினார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை, கால்களை பிடித்து இழுத்து, அருகில் இருந்த சுவரில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றான். இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் சீதாலட்சுமி புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போனை பறித்துச்சென்றவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பலமனேரி சேர்ந்த செந்தில்குமார் என்பதும், தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் கீழக்கடை பஜார் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

இவரை தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சினிமாவில் வரும் காட்சிகளை போல் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தை அறிந்த மாநகர குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளி தீவிரமாக தேடி அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn