60 வயதிலும் கல்வி கற்க முடியும் - சாதித்துக் காட்டிய கொத்தமங்கலம் தனபாக்கியம் அம்மாள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்வி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் 40 மையங்களில் தமிழ்நாடு முறைசாரா கல்வி இயக்கம் மூலமாக எழுத்தறிவு இயக்கம் "கற்போம் எழுதுவோம்" என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இதில் கொரனோ காலத்திலும் தன்னார்வலர்கள் வீடுகளில் கற்பித்து வந்தனர். அதில் 18 வயதுக்கும் மேற்பட்ட 1000 பேருக்கு மேல் கல்வி கற்று வருகின்றனர்.
97 வயது பரங்கி தாத்தா முதல் 21 வயது லெட்சுமி வரை உள்ளனர். அவர்களில் கொத்தமங்கலத்தைச் சேர்த்த 60 வயது மூதாட்டி தனபாக்கியம் அம்மாள் மூன்று மாத பயிற்சியில் தற்போது மூன்றாம் வகுப்பு பாடநூலை வாசிக்கும் அளவுக்கு கற்றலில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முறைசாரா கற்றல் என்பது சுய இயக்கம் கற்றல் அல்லது அனுபவத்திலிருந்து கற்றல் போன்றது. முறையான கற்றலை விட முறைசாரா கற்றல் வித்தியாசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் எந்த நோக்கமும் இல்லை மற்றும் கற்பனையின் நிலைப்பாட்டிலிருந்து வேண்டுமென்றே திட்டமிடப்படாதது.
அனைத்து கற்கும் மாணவர்களுக்கான இந்த சூத்திர மொழி கட்டிடம், சமூகமயமாக்கல், ஊடுருவல் மற்றும் நாடகம் ஆகியவை அடங்கும். அறிவாற்றல் கற்றல் என்பது அறிவாற்றல் மூலம் ஆசிரியர் - மையப்படுத்தப்பட்ட கற்றலின் பாரம்பரிய பார்வைக்கு மாறாக, அறிவை உருவாக்குவதன் மற்றும் பங்குபெறுவதன் மூலம் அல்லது கற்றல் மூலம் கற்றல் ஒரு பரவலான கற்றல் நிகழ்வு ஆகும்.
தனபாக்கியம் அம்மாள் பள்ளிக்கூட மே சென்றதில்லை. கற்போம் எழுதுவோம் மூலம் படித்து கடகடவென வாசிக்கும் தனபாக்கியம் அம்மாவை - நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்தியுள்ளனர் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநர் அமுதவள்ளி. உடன் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெகனாதன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் விவேகானந்தன் பாரதி, கல்வித்துறை அலுவலர்கள்
கற்பதற்கு வயது தடையில்லை என்பதை நிருபித்து காட்டிய தனபாக்கியம் அம்மாவுக்கும், கற்பித்த தன்னார்வலர் யோகப்பிரியாவுக்கும் தலைமை ஆசிரியர் சித்திரா ராணி மற்றும் ஆசிரியர் ஜான் ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மருத நாயகம் வாழ்த்துகளை தெரிவித்து தொடர்ந்து செய்திட ஊக்குவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm