ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் SIT விசாரணை
கடந்த 2010 ஆம் ஆண்டு திருச்சி பிரீமியர் லீக் எனும் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திருச்சி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அது தொடர்பாக ராமஜெயம் பெயரை வைத்து பல லட்ச ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது. ராமஜெயத்திற்கு தெரிந்த அணியினரை திருச்சி கிரிக்கெட் சங்கம் போட்டியில் விளையாட வைக்காமலும் போட்டியில் நடத்த பல தடைகளை ஏற்படுத்தியிருந்தது.பின்பு போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் திருச்சி கிரிக்கெட் சங்க தற்போதைய செயலாளர் சஞ்சய், இணை செயலாளர் குமார் இருவரிடமும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டனர். ராமஜெயத்திற்கும் இவர்களுக்கும் என்ன பிரச்சனை நடந்தது என்பது தொடர்பாக இவர்களிடம் விசாரிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு வரும் அனைத்து தகவல்களையும் தாமதிக்காமல் அடுத்த நிமிடமே விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி ஒவ்வொரு நாளும் புதிய புதிய கோணங்களில் விசாரணை மேற்கொண்டு அனைவரையும் பரபரப்பில் வைத்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO