தடுப்பூசி போட்டுக் கொள்வது இறப்பு விகிதத்தை குறைக்குமா? -மருத்துவர் செந்தில்குமார் விளக்கம்! 

தடுப்பூசி போட்டுக் கொள்வது இறப்பு விகிதத்தை குறைக்குமா? -மருத்துவர் செந்தில்குமார் விளக்கம்! 

உலகம் முழுவதும் கொரானா தொற்றால்  போராடிக் கொண்டிருக்கும் மக்களை பாதுகாக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
 குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாககப்பட்டுள்ளது இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே பல்வேறு தயக்கங்களும் சந்தேகங்களும் எழுகின்றன இதுகுறித்து   விளக்கங்களை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில் குமார் விளக்கியுள்ளார்.


 கொரானா  தடுப்பூசி பற்றி தெரிந்துக்கொள்ளும் முன்  முதலாக மக்கள் நோய் மற்றும் நோய் பரவல் இரண்டிற்குமான வேறுபாடுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்று, பெரும்பாலும் முதல் படியாக, நோயை உண்டாக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகள் உங்கள் உடலில் நுழைந்து பெருக்கத் தொடங்கும் போது ஏற்படுகிறது.  
உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடையும் போது - நோய்த்தொற்றின் விளைவாக - நோய் ஏற்படுகிறது, மேலும் நோயின்  அறிகுறிகளும் தோன்றும்.

 இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது  என்பது மிக முக்கியமான ஒன்று ஏனெனில்  நம்மை பாதுகாத்துக் கொள்ள தற்போது இருக்கும் தடுப்பூசியை தவிர  வேறு வழியில் இல்லை.
 தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது மக்கள் அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ரத்தம் உறைதல்  போன்றவை ஏற்படும் என்ற ஒரு அச்சம்   மக்களிடையே பரவி வருகிறது இந்த சந்தேகத்திற்கு மத்திய  சுகாதார துறை அமைச்சகமும் பல மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ள நிலையிலும் மக்கள்   அவற்றை புரிந்து கொள்ளாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர்


 சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ரத்தம் உறைதல் ஏற்படும் வாய்ப்பினை விட  தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தடுப்பூசி போட்ட கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் என்பது மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.


 முதலில் அரசு மக்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்டு பின்பற்றுவது மிக அவசியமானது.
 முக கவசம் அணிதல் ,சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், அதிகமாக மக்கள் ஒரே இடத்தில்  கூட்டம் சேராமல் இருந்தால், வீடுகளிலேயே இருமல் யாருக்கேனும் இருந்தால் வீடுகளிலும் முக கவசம் அணிந்து கொள்வது அவசியமாகின்றது .

அதுமட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு  கொராத் தொற்று ஏற்படுமா   என்றால் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு ஆனால் தொற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
 தடுப்பூசி என்பது நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதையும் தாண்டி நோய் தொற்று ஏற்பட்டாலும் நம்மை மிகப் பெரும் இன்னலுக்கு ஆளாகமல்  நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவே தடுப்பூசி பயன்படுகிறது.

 இன்னும் சில மக்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு அவசியமில்லை என்று கருதுகின்றனர் ஆனால் இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளும் போதுதான் முழுமையாக உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
இன்றைக்கு பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறக்கின்றனர் இதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது மிக முக்கிய காரணம் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் இறப்பு விகிதத்தை நம்மால் குறைக்க இயலும் இது மட்டும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதால் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.


அரசு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இடையே  முன்னர் குறிப்பிட்டிருந்த கால இடைவெளியை விட தற்போது  அதிகப்படுத்துவதற்கான மிக முக்கிய காரணம் ஆய்வுகளின் போது இந்த இடைவெளி கூட நோய் தடுப்பு எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பதால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றது
என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK