சாலையிலேய கடைகள் வாகன போக்குவரத்து சிக்கி தவித்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநகராட்சி

சாலையிலேய கடைகள் வாகன போக்குவரத்து சிக்கி தவித்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநகராட்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கோவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நேற்று திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் அதிக பட்சமாக ஒரு நாளில் ஆயிரத்து 224 பேர் கோவில் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருச்சி காந்தி சந்தை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் இனி இங்கே நடைபெறாது. மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் மேல புலிவால் ரோடு காமராஜர் வளைவு முதல் வெள்ளிவரை கீழ்ப்புறம் மொத்த வணிகமும் மேல்புறம் சில்லரை வணிகமும் நடைபெறும். இன்று (17.05.2021)காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று காலை 6 மணிக்கு காய்கறி வாங்கச் சென்ற பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் முதலிலே ஏமாற்றமே மிச்சம் ஆனது. விடியற்காலையிலேயே அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்துவிட்டது .மரக்கடை, வெல்லமண்டி சாலை ,மேலப்புலிவார்டு ரோடு பகுதிகள் சாலையிலேயே காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. மதுரை ரோடு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் சாலை மூடப்பட்டது.பொதுமக்கள் காலையில் காய்கறிகள் வாங்க ஏராளமானோர் இப்பகுதிகளை குவிந்தனர்.

தனிமனித இடைவெளி மீண்டும் கேள்விக்குறியானது.முதல் நாள் என்பதால் முறையாக இன்னும் கடைகள் அமைக்கப்படாத சூழ்நிலையே நிலவியது. சாலையிலேயே காய்கறி கடைகள் வியாபாரம் வாகன போக்குவரத்து என எல்லாம் ஒருங்கே இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.மாநகராட்சி உடனடியாக வியாபாரிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கித் தந்து பொதுமக்களை கூட்ட நெரிசலில் சிக்காமலும் கோவிட் தொற்றயை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK