திருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில் பறிமுதல்

திருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில் பறிமுதல்

தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஊரடங்கு  என்பது பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் 9ஆம் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டது. இந்நிலையில் 8 ,9 ஆகிய தேதிகளில் மதுபானங்களை அதிகமானோர் மூட்டை மூட்டையாக வாங்கி குவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மது பானம் விற்பவர்களை யார் என சோதனை நடத்தி வந்தனர். அப்போது பாலக்கரையை சேர்ந்த முத்துகுமாரசாமி என்பவர் தனது குடோனில் 1776 மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அதிரடி சோதனை நடத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  அனைத்தும் டாஸ்மாக் மதுபானங்கள்   சட்டவிரோத விற்பனைக்கு அரசு அனுமதிக்காது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த மதுபானங்களின் மதிப்பு 2 லட்சத்து 13 ஆயிரம் அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. கைது செய்யப்பட்ட முத்துக்குமாரசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd