குழந்தை பேறு, திருமண வரம் வேண்டி வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கீழமுறு க்கூர் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களால் சிறிய கன்றாக வேப்ப மரமும், அரச மரமும் அருகே நட்டு வைக்கப்பட்டது. தற்பொழுது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அது வளர்ந்து அழகாக காட்சியளித்து வருகிறது.
மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு 9 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், அவை நடப்பட்ட நாளான அதே ஆவணி 12-ந் தேதி கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுமையான வழிபாட்டை நடத்தினர். அதன்படி குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு மழலை செல்வம் வேண்டியும், திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கு திருமண வரம் வேண்டியும், ஊர் மக்கள் நன்மைக்காக மழை வேண்டியும் வேம்புவிற்கும், அரச மரத்திற்கும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.
இதையொட்டி 2 மரங்களுக்கும் பூ, பொட்டு, மஞ்சள் குங்கும் வைத்து அலங்கரிக்கப்பட்டது. பின்னர் யாக வேள்வி நடந்தப்பட்டு திருமணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வணங்கினர். நிஜ திருமண நிகழ்ச்சி போல வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.
இதில் நடராஜபுரம், அரசங்குடி வேங்கூர், கூத்தைபார், உட்பட கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை கீழ முறுக்கூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision