குடிநீரில் கழிவுநீர் கலந்து குழந்தைகள் பாதிப்பு - திருச்சி அருகே கண்டுகொள்ளாமல் கிடக்கும் பஞ்சாயத்து!

குடிநீரில் கழிவுநீர் கலந்து குழந்தைகள் பாதிப்பு - திருச்சி அருகே கண்டுகொள்ளாமல் கிடக்கும் பஞ்சாயத்து!

திருச்சி ஜீயபுரம் அருகே திருச்செந்துரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 25 வருடங்களாக தூய்மையான குடிநீர் கிடைக்கவில்லை என்றும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement

திருச்செந்துரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த நீரை பருகிய குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து திருச்செந்துரை பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அப்பகுதியில் 2014-ஆம் ஆண்டு பொது கழிப்பறை கட்டப்பட்டு பராமரிப்பு இல்லாமல் மூடி கிடைப்பதால் பெண்கள் இரவு நேரங்களில் சிரமப்படுவதாகவும் இதுகுறித்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியின் 9வது வார்டு உறுப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm