திருச்சியில் மழை நீர் வடிய  எடுத்த முயற்சி - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சியில் மழை நீர் வடிய  எடுத்த முயற்சி - பொதுமக்கள்  சாலை மறியல்  போராட்டம்
கடந்த ஒரு வாரமாக  பெய்த மழையில் திருச்சி குளங்கள் அதிகமாக நிரம்பியது.  இதனால்
திருச்சி புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் ,பால் பண்ணை அருகேயும் உள்ள கொட்டப்பட்டு  குளமும் நிரம்பி உள்ளது. 
இதனால் அருகே உள்ள ஜே கே நகர் பகுதி வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஒரு வார காலமாக மழை நர் தேங்கி இருப்பதால் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ ஆரோக்கியராஜ் நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

 மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை வைத்து இந்த குளத்தின் வடிகால் வழிப்பாதையை மூலம் மழை நீர் வடிய நடவடிக்கை எடுத்தனர்.  மாநகராட்சி அதிகாரிகள் மாற்றுப்பாதை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற முயற்சி செய்த போது அருகில் அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிக்கு அந்த மழைநீர் வந்துவிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

குளத்தின் வடிகால் பாதைகள் முழுவதும் மண்மூடி கிடைக்கிறது. அதை சரி செய்யாமல் மாற்றுப்பாதையில் மழைநீரை வழிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர் .மேலும்பணி தொடர்ந்து நடைபெற்றதால் இதை கண்டித்து அப்பகுதி மக்கள்  திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மாற்றுப்பாதையில் மழைநீர் வழிய எடுத்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn