திருச்சி விஷன் செய்தி எதிரொலி - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலை பள்ளம் சீரமைப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையின் நடுவே கடந்த ஒருமாதமாக பள்ளம் ஏற்பட்ட குண்டும் குழியுமாக இருந்தது இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் செல்லும் வழியில் சாலையின் நடுவே பாதாளசாக்கடை மூடி உள்ளது.
அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படும்போது இந்த குழாய் மூடியை திறந்து அடைப்புகளை எடுத்துவிட்டு மீண்டும் மூடி விடுவர். அப்படி அந்த மூடியை எடுக்கும்போது தோண்டப்படும் பள்ளத்தால் வாகனங்கள் செல்லும்போது பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு அடிக்கடி குழி தோண்டப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெரிய பள்ளமாக ஏற்பட்டது.
இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காயமடைந்தனர் இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்கள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் அந்தப் பள்ளத்தின் மீது பெயரை வைத்தனர். இதுகுறித்து கடந்த திங்கட்கிழமை திருச்சி விஷன் நேரலை செய்யப்பட்டது. இச்செய்தியை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தற்போது அந்த சாலை ஏற்பட்ட பள்ளத்தை தற்காலிகமாக மூடி உள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர். மேலும் தற்போது சரி செய்யப்பட்டு உள்ள இந்த சாலையில் பள்ளம் ஏற்படாத வகையில் புதிதாக தார் சாலை போட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn