திருச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூவர் கைது

திருச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூவர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள மாருதி நகரை சேர்ந்த தமிழரசன் மகன் வடுகநாதன் (29). இவர் அதே பகுதியில் டாட்டூ சலூன் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடுகநாதன் சலூன் கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். பின்னர் வழக்கம்போல் சலூனை திறப்பதற்காக வடுகநாதன் வந்து பார்த்தபோது இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது‌.

அதிர்ச்சியடைந்த வடுகநாதன் உள்ளே சென்று பார்த்தபோது சலூனில் இருந்த மடிக்கணினி, டாட்டூ மெசின் உள்ளிட்ட உபகரணங்களை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வடுகநாதன் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசா திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் டோல்கேட் பகுதியில் கொள்ளிட காவல் உதவி ஆய்வாளர் நெஜி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். மேலும் மூவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கீடுக்கு பிடி விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாருதி நகரில் சலூன் கடையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, டாட்டூ மிஷின் உள்ளிட்ட பொருள்களை திருடியது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவங்களை தொடர்புடைய திருச்சி காஜாபேட்டை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ஆல்பின்(20) இவரது நண்பரான பாலக்கரை சேர்ந்த நித்திஷ்குமார் (18) அதே பகுதியை சேர்ந்த (17வயது) சிறுவன் உட்பட மூவரை கைது செய்து சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும் ஆல்பின் மற்றும் நித்திஷ்குமார் இருவரையும் கொள்ளிடம் போலீசார் ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision