குண்டும், குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்

குண்டும், குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்

திருச்சி மாவட்டத்தில் கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மழையால் மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருச்சி மெயின் கார்டுகேட் சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். எனவே இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு, தலைமை காவலர் மெர்லின்,

சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவேல் மற்றும் முதல் நிலை காவலர் பொன்ராஜ் ஆகியோர் தாமாக முன் வந்து குண்டும், குழியுமான காணப்பட்ட சாலையை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision