திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம் - மூன்று பேர் கைது - 78 ஆயிரம், டோக்கன்கள் பறிமுதல்

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்  - மூன்று பேர் கைது - 78 ஆயிரம், டோக்கன்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் குறைய தெரிவிக்க அவருடைய தொலைபேசி எண்ணை தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியார் மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட தனிப்படை போலீசார் அந்த கிளப்பிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சட்டம் விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து மனமகிழ் மன்றத்தில் பணிபுரியும் உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த கனகராஜ் (63), நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40), மனையடிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த மூன்று நபர்களிடமிருந்து 78 ஆயிரத்து 790 ரூபாய் ரொக்கம், 100 டோக்கன்கள், சீட்டுகட்டு ஏழு பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் வெவ்வேறு கலர்களில் உள்ள டோக்கன்கள் ரொக்கமதிப்பு உடையது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஜமூன்று பேர் மீது துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision