பேருந்தில் தவறவிட்ட 5.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் - ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டு - அலைகழித்த போலீஸ்

பேருந்தில் தவறவிட்ட 5.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் - ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டு - அலைகழித்த போலீஸ்

சென்னை மாதவரத்தில் இருந்து பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த 4ம் தேதி அரசு பேருந்து வாயிலாக பெரம்பலூரை சேர்ந்த மதீனா என்கிற பயணி பயணித்து வந்துள்ளார். அப்போது தனது நகை பையை அரசு பேருந்தில் கவனக்குறைவில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அரசுப் பேருந்தை பெரும்பலூரில் இருந்து கண்டோன்மென்ட் பணிமனைக்கு ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துனர் கோபால் இருவரும் எடுத்து வந்துள்ளனர்.

அப்போது ஏதோ ஒரு பை பேருந்து இருக்கையில் இருப்பதை அறிந்து அதனை ஆய்வு செய்தனர். அந்த பையில் நிறைய நகைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நகைகளை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் முறையாக விசாரனை செய்து வந்த நிலையில் மதீனா பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் மேலாளரை சந்தித்து தனது நகை காணாமல் போனது குறித்து புகார் அளித்தார்.

பின்னர் திருச்சிக்கு பேருந்து வந்திருப்பது தெரிய வரவே திருச்சி வந்தடைந்தார். இதனையடுத்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மதீனவிடம் சுமார் 5.5 லட்சம் மதிப்புள்ள 82 கிராம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன நகை பையை உண்மையுள்ளதோடு எடுத்து அதனை முறையான நபரிடம் சேர்க்க உதவிய ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு காவல்துறையினர் மற்றும் மதினாவின் உறவினர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.முன்னதாக பேருந்தில் தவறவிட்ட நகைகள் குறித்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழக கண்டோன்மென்ட் கிளை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உரியவர்களை அங்கு வரவழைத்து ஓப்படைக்க எண்ணிய நிலையில் கர்ப்பிணி பெண் மற்றும் வயதானவர்கள் என்றும் கூட பாராமல் போலீசார் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்க வைத்துவிட்டு பின்னர் போக்குவரத்து கழக கிளையிலேயே இதனை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறியதால் நீண்டநேரம் காத்திருந்த சோர்வு மற்றும் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision