நில அபகரிப்பு குற்றச்சாட்டை சொன்னவர்கள் தற்போது திமுகவில் வேட்பாளராக உள்ளார்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி

நில அபகரிப்பு குற்றச்சாட்டை சொன்னவர்கள் தற்போது திமுகவில் வேட்பாளராக உள்ளார்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மை செயலாளர் வேட்பாளரருமான கே.என். நேரு  பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் தனது தேர்தல் பரப்புரையை முடித்தார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது ஸ்டாலின் தான் முதல்வர். அப்போது திருச்சியின் முகம் மாறும் என தெரிவித்தார் .

இன்று நாளிதழ்களில் நில அபகரிப்பு தொடர்பாக செய்திகள் விளம்பரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பத்து வருடங்களாக ஏதும் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்தார்கள். திமுகவினர் யாரும் நில அபகரிப்பில் தண்டனை பெறவில்லை. குற்றம் சாட்டி அவர்கள் தற்போது திமுகவில் வேட்பாளராக உள்ளார்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம். அதிமுகவினர் தான் தண்டனை பெற்றுள்ளனர்.

திமுகவில் அப்படி யாரேதும்  ஈடுபட்டால் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார் .நீங்கள் பணம் கொடுப்பதாக ஆடியோ சர்ச்சை எழுந்துள்ளது. நாங்களும் பணம் கொடுக்கணும் அவங்களும் பணம் கொடுக்கிறார்கள் கண்டுபிடிங்க. கண்டுபிடிச்சு நீங்கதான் சொல்லனும்.

திருச்சியில் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான நடராஜனை மக்கள் முற்றுகையிடுவது குறித்து வாக்கு சேகரிப்பின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றால் யாராக இருந்தாலும் மக்கள் கேள்வி கேட்பார்கள் கேட்பார்கள் என்று பேட்டியளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81