கடத்தல் கும்பலிடம் கோடி கணக்கில் வசூல் செய்யும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் - சூர்யா சிவா தகவல்

கடத்தல் கும்பலிடம் கோடி கணக்கில் வசூல் செய்யும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் - சூர்யா சிவா தகவல்

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் சூர்யா சிவா. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராகவும், விசுவாசியாகவும் இருந்து வந்தார். இவர், சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துக்களும், நேர்காணல்களும் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும்

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் போது திருச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் ராம சீனிவாசன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா சிவா, மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சூர்யா சிவா அதிரடியாக நீக்கப்பட்டார்

தான் கட்சியில் இருந்து நீங்கப்பட்டது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட சூர்யா சிவா.... அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டதால் தான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்ததாகவும், தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் தனது தலைவனை பேசியதற்காக தான் பதிலளித்ததாகவும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். எந்த நிலையிலும் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவராகவே இருப்பேன் என்றும் இனி தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் தனக்கு இல்லை, சுயமரியாதை முக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து பெரும் வைரல் ஆனது. இந்நிலையில் சூர்யா சிவா தற்போது மேலும் ஒரு ட்வீட்டை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில் மணல் கடத்தல் கும்பலிடம் பாஜக பிரமுகர்கள் மாதம் தோறும் 50 லட்சம் முதல் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision