திருச்சி மணப்பாறையில் லாக்டவுன் கடைக்கு லாக்

திருச்சி மணப்பாறையில் லாக்டவுன் கடைக்கு  லாக்

திருச்சி மாவட்டம். மணப்பாறையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக ஜவுளி, ரெடிமேட் உள்ளிட்ட பல்வேறு கடைகள் தயாராகி வருகிறது.இதனிடையே அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த முத்தன்தெருவில் நேற்று புதிதாக ரெடிமேட் கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கடை திறப்பு விழாைவை முன்னிட்டு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய 50 பைசா நாணயதிற்கு டி- சர்ட் இலவசமாக வழங்கபடும் என கடை உரிமையாளர் சார்பில் விளம்பரம் செய்துள்ளனர்.

இதனால் பழைய 50 பைசா நாணயத்துடன் கடை முன்பு அதிகாலை முதலே இளைஞர் பட்டாளம்  சூழ்ந்தது. கடை திறக்கபட்ட சிறிது நேரத்தில் கூட்டத்தின் களேபரத்தாலும், வாகனங்களின் நெரிசலாலும் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து துண்டிக்கபட்டது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவயிடத்துக்கு வந்த போலீஸார் கூட்டத்தை கட்டுபடுத்தி, போக்குவரத்தை சீர்செய்ய முயற்சித்தனர்.

ஆனால் கட்டுபாட்டை மீறிய இளைஞர் பட்டாளத்தால் திகைத்து நின்ற போலீஸார், ரெடிமேட் கடையை இழுத்துமூட உத்தரவிட்டனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய கடை ஊழியர்கள் 50 பைசா நாணயத்திற்கு இலவச டி - சர்ட் கொடுக்க முடியாமல் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

 திறக்கபட்ட சிறிது நேரத்தில் லாக்டவுன் கடைக்கு போலீஸார் லாக் போட்டதால் டி.சர்ட் வாங்க முண்டியடித்த இளைஞர்கள் முனங்கிகொண்டே புறப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn