இலவச அவசர ஊர்தி சேவை வழங்கும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை

மருத்துவ அவசர நிலை தேவைப்படும் மக்களுக்கு விரைவான மற்றும் மனிதாபிமான சேவையை செயல்படுத்த மிக விரைவான தொழில் நுட்பத்துடன் கூடிய சேவை மிகவும் பயனுள்ளதாகிறது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நாகமங்கலம் மற்றும் தனபாக்கியம் கணேசன் பொன் நினைவு அறக் கட்டளை இணைந்து மருத்துவ அவசர ஊர்தியை பொது மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக முற்றிலும் இலவசமாக அளிக்க முன் வந்துள்ளனர்.
இந்த மருத்துவ அவசர ஊர்தியானது மகாராஷ்டிரத்தை சேர்ந்த பௌத்தர்கள் ரோசன்னே மற்றும் மருத்துவர். ஹர்ஷ் டீப் காம்ப்ளே ஐஏஎஸ் அகியோரால் நன்கொடையாக வழங்கபட்டுள்ளது.
இந்த மருத்துவ அவசர ஊர்தி முழுவதும் அவசர மருத்துவ உபகரணங்கள், இணை மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவசர சேவை மருத்துவரை உள்ளடக்கிய ஒரு முழுமையான அவசர ஊர்தி ஆகும்.
இந்த மருத்துவ அவசர ஊர்தி பொது மக்களின் பயன் பாட்டிற்காக 6.8.2021 நேற்று முதல் முதல் இலவசமாக செயல்படுகிறது. ரவி கீர்த்தி தலைமையில் இருதய நோய் நிபுணர் மருத்துவர். பாலசுப்பரமணியன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். அவசர மருத்துவ ஊர்தி தேவைப்படும் பொது மக்கள் இலவச சேவையை பெற 7373731008 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn